சுற்றுலாத்துறையை மீள ஆரம்பிக்கும் நோக்கில் இம்மாதம் 21 ஆம் திகதி விமான நிலையம் முழுமையாக திறக்கப்பட்ட பின்னர் இங்கிலாந்தை தவிர ஏனைய சகல நாடுகளிலிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தர முடியும் என்று சிறிலங்கா சுற்றுலா சபையின் தலைவர் கிமார்லி பெர்னாண்டோ தெரிவித்தார்.
எனினும் இதன் போது 3 தடவைகள் பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ளல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிறிலங்காவிற்கு வருவதற்கு முன்னர் ஹோட்டலொன்றை பதிவு செய்திருத்தல் , விசேட கொவிட் காப்புறுதி செய்திருத்தல் மற்றும் தமது நாட்டிலிருந்து விமானத்தில் ஏறுவதற்கு 96 மணித்தியாலங்களுக்கு முன்னர் பி.சி.ஆர். பரிசோதனை செய்து தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் என்பன அந்த முக்கிய விடயங்களாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.