புதுச்சேரியில் வரும் சட்டசபை தேர்தலில் 30 தொகுதிகளிலும் திமுக போட்டியிடும் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி, திமுக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
புதுச்சேரியில் திமுக.வின் முதல்வர் வேட்பாளராக ஜெகத்ரட்சகன் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றிய ஜெகத்ரட்சகன்,
“புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். அனைத்து தொகுதிகளையும் திமுக கைப்பற்றும்.
இதை நான் நிறைவேற்றி காட்டுவேன். அப்படி இல்லாவிட்டால் இந்த மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன். .” என்று கூறியுள்ளார்.