சசிகலா வெளியே வந்த உடனே இந்த ஆட்சி இருக்குமா, இல்லையா என்பது தெரிந்து விடும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வின் மக்கள் சபை கூட்டம் நாமக்கல் மாவட்டத்தில் இடம்பெற்ற நிலையில், இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குமாரபாளையம் சட்டசபை தொகுதியில் விசைத்தறி, கைத்தறி தொழில்கள் அதிகம் உள்ளன. மின்துறை அமைச்சர் தங்கமணி இருக்கும் தொகுதி.
இங்கு கந்து வட்டி கொடுமையால் இரண்டு ஆண்டுகளில் நான்கு பேர் தற்கொலை செய்து உள்ளனர். விசைத்தறி தொழிலுக்கு பயன்படும் நுால் விலை உயர்வால் தொழில் நலிவடைந்து விட்டது.
முதல்வர் பழனிசாமி. விவசாய பிரச்னைகளுக்காகவும், ‘நீட்’ பிரச்சினைக்காகவும் பிரதமரை சந்திக்கவில்லை.எதிர்வரும் 27ல் சசிகலா வெளியே வருகிறார். அந்த ஆபத்தில் இருந்து. தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பிரதமரை சந்தித்துள்ளார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.