தாய்லாந்தில் மன்னரை அவமதித்த பெண் ஒருவருக்கு நாற்பத்து மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தாய்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தாய்லாந்தில் முடியாட்சியில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும், குறிப்பாக மன்னரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் தொடர்ந்து அறவழியில் போராட்டங்கள் நடத்தி வருகின்றது.
இதன் காரணமாக மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க தாய்லாந்து காவல்துறை சர்ச்சைக்குரிய லெஸ் மஜாஸ்ட்டே எனும் சட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
இந்த சட்டத்தின்படி அரச குடும்பத்தை எதிர்த்து யார் எந்த கருத்தை சொன்னாலும், அவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் கைது செய்யப்பட்ட இந்தப் பெண்மணிக்கு இவ்வாறு தண்டனை அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.