நேபாளம், பூடான், பங்களாதேஷ் உள்ளிட்ட 6 நாடுகளுக்கு இந்திய அரசு கொரோனா தடுப்பூசி விநியோகத்தை ஆரம்பித்துள்ளது.
இந்தியா தயாரித்துள்ள தடுப்பூசிகளை வழங்குமாறு, அயல் நாடுகள் விடுத்த கோரிக்கையை ஏற்று நல்லெண்ண அடிப்படையில், இந்தியா தடுப்பூசிகளை வழங்க இந்திய அரசு முன்வந்துள்ளது.
பூட்டான், மாலைத்தீவு, பங்களாதேஷ், நேபாளம், மியான்மர், சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இன்று தொடக்கம் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
நேபாளத்திற்கு 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் நாளை வழங்கப்பட உள்ளது.