கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்து தயாரித்து வரும் சீரம் நிறுவனத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கோவிஷீல்ட் என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை, புனேயில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த நிலையில், புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த தீயணைப்புப்படை வீரர்கள் 10 வாகனங்களில் விரைந்து, சென்று கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ விபத்தினால் கோவிஷீல்ட் மருந்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தீவிபத்தில் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக, தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.