கொரோனா தொற்று மற்றும் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை மறுப்பு தெரிவித்துள்ளது.
வரும் 27 ஆம் திகதி விடுதலையாகவுள்ள நிலையில், திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சசிகலா பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், கடுமையான நிமோனியா காய்ச்சலும் அதிதீவிர நுரையீரல் தொற்றும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனியார் மருத்துவமனைக்கு சசிகலாவை மாற்ற அவரது உறவினர்கள் முயற்சித்த போதும், தம்மிடம் அனைத்து வசதிகளும் இருப்பதால், வேறு மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரைக்க முடியாது என விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தடையில்லா சான்று வழங்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.