புனேவில் ‘சீரம் இந்தியா’ நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஆயிரம் கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா வைரசுக்கான, ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி மருந்தை தயாரித்து, விநியோகிக்கும் சீரம் இந்தியா நிறுவனத்தில், நேற்று , ஏற்பட்ட தீ விபத்தில், 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து, தகவல் வெளியிட்டுள்ள, சீரம் நிறுவன தலைவர் அதர் பூனவல்லா (Adar Poonawalla) , தடுப்பூசி மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள பகுதியில், இந்த விபத்து ஏற்படவில்லை என்றும், தடுப்பூசி விநியோகம் இதனால் பாதிக்கப்படாது என்று கூறியுள்ளார்.
அதேவேளை, இந்தச் சம்பவம் நாசவேலையாக இருக்குமா என்பதைக் கண்டறிய விசாரணைகள் நடத்தப்படுவதாக மகாராஸ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே, தெரிவித்துள்ளார்.