ஜம்மு -காஷ்மீரில் எல்லை பகுதியில் 150 மீற்றர் நீளமான சுரங்க பாதை ஒன்றை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கத்துவா நகரில் அமைந்த சர்வதேச எல்லை பகுதியிலேயே, 30 அடி ஆழத்தில் இந்த சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், பாகிஸ்தான் நாட்டின், ஆளில்லா வானூர்தி ஒன்று ஆயுதங்களுடன் சுட்டு வீழ்த்தப்பட்ட பகுதியிலேயே இந்த சுரங்கப் பாதை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 6 மாதங்களில் இதே பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நான்காவது சுரங்க பாதை இது என்றும் எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.