மத்திய அரசுடன் நடைபெற்ற 11ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததையடுத்து எதிர்வரும் 26ஆம் திகதி, குடியரசு தினத்தன்று திட்டமிட்டபடி 30ஆயிரம் உழவு இயந்திரங்களுடன் 100கிலோ மீட்டர் தூரத்திற்கு பேரணியை நடத்தப்போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பேரணி செல்லும் பாதை போன்றவற்றை ஆலோசிக்க விவசாய சங்க தலைவர்கள்- காவல்துறை அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் காவல்துறையினர் பேரணிக்கு அனுமதி வழங்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.





