அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் அமெரிக்க ஜனாதிபதியின் விருந்தினர் மாளிகையில் தற்காலிகமாக தங்கியுள்ளார்.
அமெரிக்க துணை ஜனாதிபதியின் அதிகார பூர்வ மாளிகையில் புனரமைப்பு பணிகள் பணிகள் நடைபெறுவதால் கமலா ஹாரிஸ், வெள்ளை மாளிகை அருகேயுள்ள, ‘பிளேர் ஹவுஸ்’ (Blair House), என்ற, விருந்தினர் மாளிகையில் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
புனரமைப்பு பணிகள் பணிகள் முடிவடைந்ததும், அவர் அதிகார பூர்வ இல்லத்திற்கு செல்வார்,” என, கமலா ஹாரிஸ் செய்தி தொடர்பாளர் சைமன் சான்டர்ஸ் (Simon Sanders) தெரிவித்துள்ளார்.