தென்கொரியாவில் பறவை காய்ச்சல் நோய் அச்சுறுத்தல் காரணமாக, கடந்த 2 மாதங்களில் 22 மில்லியன் பண்ணை பறவைகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் தென்கொரியாவின் வடக்குப் பகுதியில் பண்ணை ஒன்றில் வாத்துகளுக்கு இந்தநோய் பரவியிருப்பது முதன்முறையாக கண்டறியப்பட்டது.
இதன்பின்னர் நாடு முழுவதும் உள்ள பண்ணைகளில் புதிய பாதிப்புகள் தென்பட தொடங்கிய நிலையில், இதுவரை 72 இடங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பண்ணைகளில் இருந்து 2 மைல் தொலைவிற்குள் உள்ள அனைத்துப் பறவைகளையும் கொல்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இன்று அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து, பைசர் நிறுவனத்திடம் இருந்து 10 மில்லியன் தடுப்பூசிகளை பெறவுள்ளதாகவும் அவுஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அடுத்த மாத இறுதியில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் அறிவித்துள்ளார்.
தடுப்பூசி உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் உலகளாவிய விநியோக சிக்கல்கள், ஏற்கனவே அவுஸ்ரேலிய விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.