2024ஆம் ஆண்டில் நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுவது குறித்து நடுநிலையுடன் முடிவெடுக்கப்படும் என்று, குடியரசு கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த ட்ரம்ப், 2024 இல் நடக்கும் தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக கூறி வருகிறார்.
இது குறித்து, கருத்து வெளியிட்டுள்ள குடியரசு கட்சியின் தேசியக் குழு தலைவர்,
“ட்ரம்ப், மீண்டும் போட்டியிடுவது குறித்து நடுநிலையுடன் முடிவு செய்யப்படும்.
ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்கு நடக்கும், ஆரம்ப தேர்தல்களின் போது, சரியான முடிவு எடுக்கப்படும்.
யார் வேண்டுமானாலும், ஜனாதிபதி வேட்பாளருக்கான தேர்வில் போட்டியிடலாம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.