நாடு முழுவதும் இதுவரை 25 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைக் கூறியுள்ளார்.
“6 நாளில் 10 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பிற நாடுகளை ஒப்பிடும் போது இது மிகவும் வேகமான நடவடிக்கை ஆகும்.
அமெரிக்காவில் 10 நாட்களிலும், பிரிட்டனில் 18 நாட்களிலும், இத்தாலியில் 19 நாட்களிலும், ஜெர்மனியில் 20 நாட்களிலும், 10 இலட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
உலகிலேயே முதன்முறையாக 10 இலட்சம் பேருக்கு அதி விரைவாக தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி ஆறு நாட்களில் இந்த மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.