கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறனில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா, உலகுக்கு கிடைத்த சிறந்த சொத்து என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்ரனியோ குட்டரெஸ் (antonio guterres) பாராட்டுத் தெரிவித்துள்ளார்
“இந்தியா தடுப்பூசிகளை அதிகளவில் உற்பத்தி செய்து வரும் நிலையில், உலக நாடுகளுக்குத் தேவையான தடுப்பூசிகளை விநியோகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.
தற்போதைய சூழ்நிலையில், இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தித் திறன்தான் உலகுக்கு கிடைத்துள்ள மிகசிறந்த சொத்து.
உலகம் அதைப் புரிந்து கொண்டு, பயன்படுத்திக் கொள்வதுடன், தடுப்பூசிகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளை உலகிலுள்ள பல்வேறு நாடுகளிலும் உற்பத்தி செய்ய ஏதுவாக அனுமதிகள் வழங்கப்பட வேண்டும்.” என்றும் ஐ.நா பொதுச் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.