தமது தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு சீனா அழுத்தம் கொடுத்து வருவதாக, இந்தியாவின் எகொனமிக் ரைம்ஸ் (Economic Times) செய்தி வெளியிட்டுள்ளது.
தமது முக்கிய பங்காளிகளில் ஒன்றான சிறிலங்காவுக்கு 3 இலட்சம் கொரோனா தடுப்பு மருந்தை வழங்குவதற்கு சீனா முடிவு செய்துள்ளது.
சினோபார்ம் தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் வேறு சில நாடுகள் அளித்துள்ள ஒப்புதலைக் காரணம் காட்டி, ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், அழுத்தம் கொடுத்துள்ளது.
சிறிலங்காவுக்கு இந்தியா கொவிஷீல்ட் தடுப்பு மருந்துகளை வழங்குவதாக அறிவித்தவுடன், சீனாவின் இந்த நகர்வு இடம்பெற்றுள்ளதாகவும் எகொனமிக் ரைம்ஸ் (Economic Times) செய்தியில் கூறப்பட்டுள்ளது.





