கொரோனா தொற்று அறிகுறிகள் நீங்கி, சசிகலா உடல்நிலை சீராக உள்ளதால் அவரை விடுவிப்பது குறித்து பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை இன்று முடிவு செய்யவுள்ளது.
தொடர்ந்து 10 ஆவது நாளாக மருத்துவமனையில் இருக்கும் சசிகலாவுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இரத்தத்தில் ஒக்சிஜன் செறிவு உள்ளிட்டவை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
நன்கு விழிப்போடு, உதவியுடன் எழுந்து நடமாடி வருகிறார் என்றும் எனவே, சசிகலாவை பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை இன்று விடுவிக்கும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.