கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்துள்ளமை குறித்து உலக சுகாதார நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி தேசியவாதம் காரணமாக, சர்வதேச ஒத்துழைப்பின் மீதான நம்பிக்கையை இழந்தால் கொரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு கடுமையான விலையை செலுத்த வேண்டியிருக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கொரோனா தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளதை அடுத்தே, இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
தமது மக்களின் பாதுகாப்பே தங்களின் முன்னுரிமைக்குரிய விடயம் என்று கூறியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், தாங்கள் எதிர்கொண்டுள்ள சவால்களை கருத்தில் கொண்டு இவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதை தவிர வேறு தெரிவுகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த கட்டுப்பாடுகளால், அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல நாடுகளை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.