கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள சசிகலா, நாளை மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் நான்கு ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, கடந்த, 27ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார்.
கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவர் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விக்டோரியா மருத்துவமனை இன்று வெளியிட்ட அறிக்கையில், சசிகலாவிற்கு 10 நாட்கள் சிகிச்சை நிறைவு பெற்றுள்ளதாகவும் கொரோனா அறிகுறி ஏதும் இல்லை என்றும் கூறியுள்ளது.
அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும், சசிகலா வீடு செல்லலாம் என பரிந்துரை செய்ததை தொடர்ந்து, அவர் நாளை வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்.
வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றும் மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.