விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக, டில்லியில் எல்லைப் பகுதிகளில் இன்று இரண்டாவது நாளாக இணையச் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
சிங்கு, காசிப்பூர், டிக்ரி மற்றும் டில்லியின் என்சிடி பகுதியை ஒட்டியுள்ள பகுதிளில் நேற்று இரவு 11 மணி முதல் நாளை இரவு 11 மணி வரை இணையச் சேவையை நிறுத்தி வைப்பது அவசியம் என மத்திய உள்துறை அமைச்சு உத்தரவிட்டிருந்தது.
அத்துடன், ஹரியானா மாநிலத்தில் 17 மாவட்டங்களிலும், இன்று மாலை 5 மணி வரை அலைபேசி இணையச் சேவையை துண்டிக்க உள்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளின் போராட்டத்தை குழப்பும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.