எத்தியோப்பியாவின் வடக்கு பிராந்தியமான டைக்ரேயின் முன்னாள் ஆளும் கட்சி, அரசாங்கத்திற்கு எதிரான தமது போராட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது.
எத்தியோப்பிய அரசாங்கத்துடன் போராடி வரும் முன்னாள் ஆளும் கட்சியான டைக்ரே மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்த முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள குரல் பதிவொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தலைமறைவாகியுள்ள டைக்ரே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ஜெப்ரெமிகேல்லின் குரல் பதிவு என தெரிவிக்கப்பட்டுள்ள குறித்த பதிவில், எத்தியோப்பிய அரசாங்கம் டைக்ரே பிராந்தியத்தில் வன்முறைகளைக் கட்டவிழ்த்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.