ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.கவும், சம பல நிலையில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை 80 மாவட்ட நகராட்சிகள், ஒன்பது நகராட்சிகள் மற்றும் ஒரு மாநகராட்சி அமைப்புகள் உள்ளிட்ட 3,034 பிரிவுகளில் தேர்தல் நடைபெற்றது.
இதில் ஆளும் கட்சியான காங்கிரஸ் ஆயிரத்து 197 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
எதிர்கட்சியான பா.ஜ.க ஆயிரத்து 140 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் 46 இடங்களையும், ஆர்.எல்,பி கட்சி 13 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.