இந்தியாவின் பாதுகாப்பிற்கு, மற்ற நாடுகளை சார்ந்திருக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் ஹிந்துஸ்தான் ஏரோ நொட்டிக்கல் நிறுவனத்தில் தேஜஸ் போர் வானூர்திகளை தயாரிக்கும் தொழிற்சாலையை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
“இந்த தொழிற்சாலையில் ஆண்டிற்கு 16 தேஜஸ் மார்க்1 ஏ போர் வானூர்திகளை உருவாக்க முடியும்.
பல வெளிநாடுகள் தேஜஸ் வானூர்தி களை வாங்க ஆர்வம் காட்டுகின்றன.
விரைவில் வெளிநாடுகளில் இருந்து, இந்த வானூர்தியை வாங்குவதற்கான உத்தரவுகள் வரும். ” என்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.