வரும் 6 ஆம் திகதி நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், நேற்று பாராளுமன்றம் நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டிருந்த போதும், உழவு இயந்திர பேரணியில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து இதனை ஒத்திவைத்துள்ளனர்.
இந்த நிலையில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் இடங்களுக்கு அருகேயுள்ள பகுதிகளில் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளதைக் கண்டித்தும் விவசாயிகளுக்கு எதிரான அத்துமீறல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்த மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும், விவசாய சங்கத்தினர் கூறியுள்ளனர்.