திருமணம் என்னும் பெயரில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதை தடுக்க மதமாற்ற தடை சட்டத்தை இயற்றும் திட்டம் இல்லை என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
“அரசியல் அமைப்பின் 7-வது அட்டவணையின்படி சட்டம்-ஒழுங்கு, காவல்துறை ஆகியவை மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டவையாகும்.
எனவே மதமாற்றம் தொடர்பான சட்ட விரோத நடவடிக்கைகள் குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெவ்வேறு மதத்தினர் இடையே நிகழும் திருமணங்களை தடுக்க மதமாற்ற தடை சட்டம் இயற்றும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.





