குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு தேவையான, 110 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியாவிடம் இருந்து கொள்வனவு செய்யவுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு மருந்துகள் பற்றி நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் யுனிசெப் அமைப்பின் தலைவர் ஹென்ரீட்டா போர் (Henrietta Fore) இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்தைக் கொள்வனவு செய்வதற்கு, இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன், நீண்டகால விநியோக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட 100 நாடுகளுக்காக தலா 3 அமெரிக்க டொலர் செலவில், 110 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை யுனிசெப் அமைப்பு கொள்முதல் செய்ய உள்ளது என்றும், அந்த அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.