பயங்கரவாத செயலில் ஈடுபட்ட ஈரானிய இராஜதந்திரிக்கு பெல்ஜியம் நீதிமன்றத்தினால், 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு பிரான்சில் ஈரானிய எதிர்க்கட்சியினர் நடத்திய பேரணியை இலக்கு வைத்து, நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புள்ளதாக, வியன்னாவில் இருந்த ஈரானிய தூதரக அதிகாரி அசாடொல்லா அசாதி (Assadollah Assadi) மீது குற்றம்சாட்டப்பட்டது.
பெல்ஜியம் நீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று ஈரானிய இராஜதந்திரிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
இந்த வழக்கில் மேலும் மூன்று ஈரானியர்களுக்கும் 15, 17 மற்றும் 18 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்புக்கு எதிராக, மேன்முறையீடு செய்யப்படும் என்று ஈரானிய இராஜதந்திரியின் சட்டவாளர் தெரிவித்துள்ளார்.