2030ஆம் ஆண்டளவில் இலாபநோக்கற்ற நீண்டகாலப் பராமரிப்பு இல்லங்களை அகற்ற வேண்டும் என்று என்.டி.பி.க.ட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் தெரிவித்துள்ளார்.
நீண்டகால பராமரிப்பு இல்லங்கள், தாதியர் விடுதிகள், அரச தொழிலாளர்களுக்கான விடுதல் உள்ளிட்டவற்றை இலாபநோக்கமற்றதாக மாற்றுகின்றனபோது வருடமொன்றுக்கு 5பில்லியன் டொலர்களை வருடமொன்று சமஷ்டி அரசாங்கம் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இந்த முன்மொழிவானது தொழில்சார் வல்லுநர்கள், புத்திஜீவிகள் ஆகியோருடன் கலந்துரையாடல்களின் பின்னர் எடுக்கப்பட்ட பரிந்துரையாகும் என்றும் அவர் கூறினார்.
தற்போது சிறுபான்மை அரசாங்கமாக இருக்கும் பிரதமர் ரூடோ தலைமையிலான அரசாங்கம் இந்த விடயத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.