மியன்மாரில் இராணுவ ஆட்சி தோல்வியடைய, ஐ.நாவினால் எதையெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வோம் என்று ஐ.நா பொதுச் செயலர் அன்ரனியோ குரெரெஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
‘மியன்மாரில் அரசியலமைப்புச் சட்டம் மீண்டும் நிறுவப்பட வேண்டும்.
அதற்கு சர்வதேச சமூகத்தில் இருக்கும் முக்கிய நாடுகள் மூலம் மியன்மார் மீது கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும்.
மியன்மார் மக்களின் மனதையும், தேர்தல் முடிவுகளையும் மறுப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நாட்டை இப்படி நடத்தக் கூடாது, இப்படி முன்னெடுத்துச் செல்லக் கூடாது என்பதை மியன்மார் இராணுவத்துக்கு புரிய வைக்க முடியும் என நம்புகிறேன்’ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்