அமெரிக்காவில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, 4 பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் மில்கிரீக் பனிமலை பிரதேசத்தில் 9 ஆயிரத்து 300 அடி உயரத்தில் பனிச்சறுக்கு வீரர்கள் 8 பேர் சென்று கொண்டிருந்த போது, திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதில் 4 பேர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். ஏனைய 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிர்தப்பிய 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.