இந்திய மற்றும் அமெரிக்க இராணுவங்கள் இணைந்து நடத்தும் 16-வது கூட்டு இராணுவ பயிற்சி ராஜஸ்தானில் ஆரம்பமாகியுள்ளது.
வரும், 21-ஆம் நாள் வரை நடைபெறும் இந்த பயிற்சியில் இருநாட்டு இராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் இரண்டு நாடுகளின் உலங்குவனூர்திகள், போர்த்தளபாடங்கள், ஆயுதங்களும் இந்த பயிற்சியில் பயன்படுத்தப்படுகின்றன.
பயிற்சியின்போது, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் இரு நாட்டு இராணுவங்களின் பரந்த அனுபவங்கள் பரிமாறிக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது,