விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த உழவு இயந்திர பேரணியின் போது, டெல்லி செங்கோட்டையில் இடம்பெற்ற வன்முறை தொடர்பாக நடிகர் தீப் சித்து கைது செய்யப்பட்டுள்ளார் என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
தேடப்பட்டு வந்த பஞ்சாபி நடிகர் தீப் சித்து பஞ்சாப் மாநிலம் சிர்க்காபூரில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரைப் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என்று டெல்லி காவல்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
செங்கோட்டையில் குழப்பத்தைத் தூண்டியதாகவும், வன்முறைக்குக் காரணமாக இருந்ததாகவும் தீப் சித்து மற்றும் ஏழு பேர் மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.