இஸ்ரேலில் பொதுத்தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவுக்கு (benjamin Netanyahu) எதிரான ஊழல் வழக்கு, விசாரணை ஆரம்பமாகியுள்ளது.
நண்பர்களிடமிருந்து .லட்சக்கணக்கான ரூபா மதிப்பிலான ஆடம்பரப் பொருள்களைப் பரிசாகப் பெற்றதாகவும், அந்த நாட்டு நாளிதழ்களில் தனக்கு சாதகமாக செய்திகளை பிரசுரிக்கச் செய்வதற்காக வர்த்தக உதவிகள் செய்ததாகவும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஊழல், மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் என 3 மிகப்பெரிய வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் மீதான விசாரணை ஜெருசலேம் நீதிமன்றத்தில் இன்று தொடங்கியபோது, பெஞ்சமின் நெதன்யாஹூ நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.





