இந்திய கடற்படையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஐ.என்.எஸ். விராட் போர்க்கப்பலை உடைக்கும் முடிவை நிறுத்தி வைக்குமாறு புதுடெல்லி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய கடற்படையில் 30 ஆண்டுகள் சேவையாற்றிய ஐ.என்.எஸ். விராட் என்ற விமானம்தாங்கி போர்க்கப்பல் 2017ல் கடற்படையில் இருந்து விடுவிக்கப்பட்டது.
இதையடுத்து நிறுவனம் ஒன்று அதனை 38.54 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுத்து, உடைப்பதற்காக குஜராத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
விராட் கப்பலை அருங்காட்சியகமாக மாற்ற விரும்பிய நிறுவனம் ஒன்று, 100 கோடி ரூபாவுக்கு அதனை வாங்க முடிவு செய்த போதும், அதற்கான தடையில்லா சான்றிதழை வழங்க மத்திய அரசு மறுத்திருந்தது.
இதனை அடுத்து, குறித்த நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஐஎன்எஸ் விராட் கப்பலை உடைப்பதை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.