லடாக் எல்லையில் இருந்து 200இற்கும் மேற்பட்ட டாங்குகளை விலக்கிக் கொண்டிருப்பதாக சீனா அறிவித்துள்ளது.
லடாக்கில் இந்தியாவுடனான எல்லையில் சீன படைகள் அத்துமீறி நுழைந்து முகாமிட்டிருந்தன. முதல் கட்டமாக பாங்காங் ஏரி பகுதியில் இருந்து படைகளை விலக்க சீனா இணங்கியுள்ளது.
அதன்படி பாங்காங் ஏரியின் வடக்கு பகுதியில் இருந்து படைகளை விலக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது.
சீன படைகள் 200-க்கும் மேற்பட்ட டாங்குகளையும் நூற்றுக்கணக்கான பீரங்கிகள் உள்ளிட்ட தாக்குதல் வாகனங்களையும் விலக்கிக் கொண்டுள்ளது.
இதேபோல இந்தியாவும் நூற்றுக்கணக்கான டாங்குகள் மற்றும் கவச வாகனங்களையும், விலக்கி வருகிறது.
மூன்று நாட்களில் போர் டாங்குகள், ஆயுத வாகனங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று இணக்கம் காணப்பட்டுள்ளது.
அதன்படி நாளைக்குள் அனைத்து போர் வாகனங்களும் வெளியேறிவிடும் என்றும், தகவல்கள் கூறுகின்றன.