விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளை கோரியுள்ளதோடு 25 விருப்பத் தொகுதிகளையும் பட்டியலிட்டு கூட்டணியின் தலைமைக்கட்சியான தி.மு.க. விடத்தில் கொடுத்துள்ளது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தை, முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்றவை இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு கட்சிகளும் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை தி.மு.க.விடம் வழங்க ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் தொகுதிப்பங்கீடு குறித்து தி.மு.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே இரு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.