புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இருந்து விலக என்.ஆர். காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக, அதிமுக, என்.ஆர் காங்கிரஸ் கட்சிகள் இணைந்தே, புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், காரைக்காலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதுச்சேரியில் பாஜக தலைமையில் ஆட்சி அமையும் என்று தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்து, பாஜக கூட்டணியில் இருக்கும் என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது,
இதனால், தனித்து போட்டியிட கட்சியின் தலைவர் ரங்கசாமி முடிவு செய்திருப்பதாகவும், ஆதரவாளர்களுடன் அவர் இரகசிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரங்கசாமி நாளை அதிகாரப்பூர்வமாக தமது முடிவை அறிவிக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.





