கொடிகாமம் பொதுச்சந்தையை, பொதுச் சுகாதார அதிகாரிகள் தற்காலிகமாக முத்திரையிட்டு மூடியுள்ளனர்.
கொடிகாமம் பொதுச்சந்தையில், நேற்று மேற்கொள்ளப்பட்ட எழுமாற்றான பி.சி.ஆர். பரிசோதனையில் வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து குறித்த பொதுச் சந்தை இன்று மூடப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கில் நேற்று 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்தது.
கொடிகாமம் பொதுச்சந்தையில் வியாபாரி ஒருவருக்கும், நவாலியில் தொற்று கண்டறியப்பட்ட ஆசிரியையுடன் தொடர்புடைய ஐந்து பேருக்கும், யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் பயிலும் மாணவர் ஒருவருக்கும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும், தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





