யாழ்ப்பாணத்தில் தீவகப் பகுதிகளுக்கான மின் திட்டங்களை, சீன நிறுவனத்திடம் வழங்குவது தொடர்பாக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றம் செய்யப்படாது என்று சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதியளிக்கப்பட்ட எந்தவொரு தீர்மானமும் அரசியல் மற்றும் சர்வதேச இராஜதந்திர நெருக்கடிகளால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிறுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுபோன்றே, இனிவரும் காலத்திலும் அமைச்சரவை தீர்மானங்களுக்கு மாறாக ஒருபோதும் முடிவுகள் எடுக்கப்படாது” என்றும் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் கூறியுள்ளார்.





