நேபாளம், பூடான் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் 13 ஆயிரம் வீரர்களை கொண்ட 12 பட்டாலியன்களை உருவாக்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
நேபாளம், பூடான் எல்லைகளை ஒட்டியுள்ள பகுதிகளின் பாதுகாப்பை ஆயுதம் தாங்கிய எல்லை பாதுகாப்பு படைப் பிரிவு கவனித்து வருகிறது. இந்தப் படையில்90 ஆயிரம் வீரர்கள் உள்ளனர்.
சிக்கிம் மாநிலத்தில், பூடான் மற்றும் திபெத் உடனான எல்லைப் பகுதியையும் இந்தப் படைப் பிரிவு கண்காணித்து வருகிறது. இதன் தேவைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 2019 ஆம் ஆண்டு ஆய்வு செய்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





