திமுக கண்டு கொள்ளாததால், திமுக.வுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நடிகர் கருணாஸ், அந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரான நடிகர் கருணாஸ் 2016 சட்டசபை தேர்தலில், அதிமுக கூட்டணியில் திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
சசிகலா ஆதரவாளர்களான அவரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரியும், அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, நேற்று திமுக.விற்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால் திமுக. இவர்களை கண்டு கொள்ளாத நிலையில், திமுக.வுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக கருணாஸ் இன்று அறிவித்துள்ளார்.
தமிமுன் அன்சாரி திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.





