ஒன்ராரியோவில் துரித அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு முதல்வர் டக் போர்ட் (Doug Ford) எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தினை பொருளாதார ரீதியாக ஸ்திரமாக்கும் அதேநேரம் அபிவிருத்தி திட்டங்களையும் சமாந்தரமாக மேற்கொள்வதற்கு அவர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகின்றது.
எனினும், டக் போர்ட் (Doug Ford) சர்ச்சைக்குரியதாக கருதப்படும் காணித்திட்டமிடல் விடயத்தினை இந்த அபிவிருத்தியின் கருவிகளில் ஒன்றாக பயன்படுத்த முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த முடிவானது பலத்த அதிருப்திகளை தோற்றுவித்திருப்பதாக மாகாண அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.





