மார்க்கம் பகுதியில் உள்ள செல்லபிராணி வளர்ப்பாளர்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிபொன்று விடுக்கப்பட்டது.
சில தினங்களுக்கு முன்னதாக அப்பகுதியில் உள்ள ரோயர் ஒர்சட் (Royal Orchard) பூங்காவில் நடைப்பயிற்சியை மேற்கொள்வதற்கான தனது செல்லப்பிராணியுடன் சென்ற பெண்ணொருவர் இறைச்சி துண்டொன்றை கண்டுள்ளார்.
அவர் வழங்கிய தகவல்களை அடுத்து அதனை பரிசோதனைக்கு உட்படுத்திய அதிகாரிகள், இனந்தெரியாத கொடூரமான விலங்கொன்றின் நடமாட்டம் இருக்கின்றது என்பதை ஊகித்துள்ளனர்.
இதனையடுத்து பூங்காக்கள் உட்பட மார்க்கம் பகுதியில் உள்ள செல்லப்பிராணி வளர்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





