சிறிலங்கா தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இந்த தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்பங்களுக்கும் சலவை இயந்திரம் மற்றும் கேபிள் தொலைக்காட்சி இணைப்பு இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதிமுக வாக்குறுதி அளித்துள்ளது.