மாணவி ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக, ரொறன்ரோவில் உள்ள ஆசிரியர் ஒருவர் மீது காவல்துறையினரால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
East York பகுதியில் உள்ள செல்வின் பப்ளிக் (Selwyn பாடசாலையில் 2020 செப்ரெம்பர் மாதம் தொடக்கம், 2021 பெப்ரவரி 28ஆம் திகதி வரை இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவி மீது இந்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் இரண்டு முறை பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.
மார்ச் 9ஆம் நாள் கைது செய்யப்பட்ட, 34 வயதுடைய குறித்த ஆசிரியர் மீத இரண்டு பாலியல் தாக்குதல் வழக்குகள் உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.