ரொறன்ரோ மற்றும் பீல் பிராந்தியங்களில் இன்று தொடக்கம் வெளிப்புற உணவருந்தல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவில் நேற்று முதல்வர் டக் போர்ட் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தை அடுத்து, இதுதொடர்பான நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சாம்பல் நிறை வலயத்துக்கான நடைமுறைகளுக்கு அமைய இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஒன்ராறியோவில், சிவப்பு வலயத்தில் உள்ள உணவகங்களில், 50 பேரும், செம்மஞ்சள் வலயத்தில் உள்ள உணவகங்களில் 100 பேரும் அமர்ந்திருந்து உணவருந்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.