தரையில் இருந்து, பீரங்கிகளை தாக்கி அழிக்கும், 4,960 ஏவுகணைகளை, கொள்வனவு செய்ய, இந்தியப் பாதுகாப்பு அமைச்சு ஒப்பந்தம் செய்துள்ளது.
முப்படைகளின் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தரையில் இருந்து, 1,850 மீட்டர் தூரம் பறந்து சென்று, எதிரிகளின் பீரங்கிகளை தாக்கி அழிக்கும், 4,960 ஏவுகணைகள் வாங்க இந்தியப் பாதுகாப்பு அமைச்சினால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணைகளை, 1,188 கோடி இந்திய ரூபா செலவில், பாரத் டைனமிக்ஸ் நிறுவனம், பிரான்சின் தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்க உள்ளது.
மூன்று ஆண்டுகளில் தயாரிப்பு பணிகள் நிறைவடையும் என, பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.





