வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது.
இந்த ஏவுகணைகள் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 7.06 மணிக்கும், 7.25 மணிக்கும் வட கொரியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு பகுதியில் இருந்து ஏவப்பட்டதாகவும், அவை 450 கிலோமீற்றர் தொலைவுக்கு பறந்து கடலில் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடியவை என்று கருதி, அவற்றை வட கொரியா ஏவிசோதிப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு சபை தடை விதித்துள்ளது.
முன்னதாக 21ஆம் திகதி குறுகிய தொலைவுக்கு செல்கிற 2 ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதித்தது. இந்த ஏவுகணைகள் மஞ்சள் கடலில் விழுந்தன.
இந்த செயற்பாட்டை ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக பார்க்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்த நிலையிலேயே தற்போது மற்றுமொரு பரிசோதனையை வடகொரியா மேற்கொண்டுள்ளது.