தகுதியுள்ள அனைவரும் வாக்களிப்புச் செய்து சாதனை படைக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது.
இதன்படி, 77 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், தகுதியுள்ள அனைவரும் வாக்களிப்புச் செய்து சாதனை படைக்க வேண்டும் என பிரதமர் மோடி கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், மக்கள் திரண்டுவந்து வாக்களிப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிலும் குறிப்பாக இளம் வாக்காளர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்