உயிர்த்த ஞாயிறு தொடர்பில் நிகழ்வுகள் எதற்கும் திட்டமிடல்களைச் செய்ய வேண்டாம் என்று ஒன்ராரியோ முதல்வர் டக்போர்ட் கோரியுள்ளார்.
மாகாணத்தின் நிலைமைகள் மோசமாகி வரும் நிலையில் தற்போது உள்ளதை விடவும் இறுக்கமான கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், இம்முறை அதிகளவான நிகழ்வுகள் மெய்நிகர் வழியிலேயே நடத்தவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் தற்போது வரையில் ஒன்ராரியோவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.